
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காயத்ரி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
இந்த தொடரில் நிலா என்ற கேரக்டரில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடரில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் நாம் இருவர் நமக்கு இருவர், அரண்மனைக்கிளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இவர் தனக்கு நடனம் சொல்லிக் கொடுத்த யுவராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை காயத்ரி youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் பல நல்ல விஷயங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் தான் இவருக்கு பல வருடங்கள் கழித்து இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்ட காயத்ரி முழு நேரமும் குடும்பத்தை கவனித்து வருகிறார்.
தற்போது சொந்தமாக டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை திறந்து இருக்கின்றார். இந்த திறப்பு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்த நடிகை காயத்ரி திறப்பு விழாவிற்கு நடிகர் ஆரி, புகழ், நடிகை பவித்ரா, ராம்ஜி உள்ளிட்ட பலரை அழைத்திருந்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இதோ…
View this post on Instagram