
பொதுவாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்திருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் உறவுகளை மையமாகக் கொண்டு நகரும் இந்த தொடருக்கு குடும்பத் தலைவிகளின் ஆதரவு அதிகமாகவே இருக்கிறது.
நடிகை கோமதி பிரியா இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, சிறகடிக்க ஆசை தொடரின் மலையாள ரீமேக்கிலும் கோமதி பிரியா தான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான படப்பிடிப்பு நடந்த சமயத்தில் தனக்கு விபத்து ஏற்பட்டதாக கோமதி பிரியா கூறியுள்ளார்.
அதாவது, கதையின்படி கோமதி ப்ரியா தன் தோழியுடன் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார். அந்த காட்சியில் நடித்த போது பைக் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. எனினும், பெரிய அளவில் காயங்கள் இல்லாமல் தப்பியதாக கூறியிருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்றை தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோமதி பிரியா வெளியிட்டுள்ளார். அதில் தன் முதல் விபத்து இது என்றும் பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram