
மகாலட்சுமி
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் மகாலட்சுமி. இவர் அணில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படத்துறைகளில் பணியாற்றிய நடிகை ஆவார்.
பின் கணவர் அணில் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை விவாகரத்து செய்தார். கடந்த ஆண்டு பட தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் ட்விட்டர் மற்றும் பிற சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இவரின் இரண்டாம் திருமணத்திற்கு சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை இருவரும் கண்டுகொள்ளாமல் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.
புகைப்படம்
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மகாலட்சுமியின் முதல் கணவரின் மகன் சச்சினுக்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அப்போது மகன் கேக் வெட்டும் புகைப்படத்தை இணையத்தில் மகாலட்சுமி பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பெரிய பையனாக வளர்ந்து விட்டானே என்று கூறி வரும் நிலையில், தற்போது அந்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ புகைப்படம்,