“காவாலா” பாடலுக்கு பள்ளி மாணவர்கள் போட்ட குத்தாட்டம்.. வைரலாகும் வீடியோ..!!

ஜெயிலர்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து, நாளை ரிலீசாகயுள்ள படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், தமன்னா, மோகன்லால், சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் இருந்து வெளிவந்த காவாலா மற்றும் hukum ஆகிய இரு பாடல்களும் மாபெரும் ஹிட்டாகி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.

காவாலா பாடலுக்கு நடனமாடிய பள்ளி மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ | School Students Dance For Kaavala Song

   

குறிப்பாக இந்த படத்தில் நடிகை தமன்னாவின் நடனம் ஆடிய பாடலை 100 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்துள்ளது. இதன்மூலம் youtube-ல் காவாலா பாடல் பெரும் சாதனையும் படைத்துள்ளது.

வைரலாகும் வீடியோ

மேலும் இந்த பாடலுக்கு தமன்னா போலவே, நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் நடனமாடி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

காவாலா பாடலுக்கு நடனமாடிய பள்ளி மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ | School Students Dance For Kaavala Song

இந்நிலையில், தற்போது பள்ளி மாணவர்கள் கூட்டமாக திரண்டு காவாலா பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ..