தனுஷ் பட விழாவில் அசம்பாவிதம்… நடிகைக்கு ரசிகர் பாலியல் தொல்லை.. வைரலாகும் வீடியோ…!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நடிகை பிரியங்கா மோகன் போன்றோர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கான நிகழ்ச்சி நேற்று நடந்திருக்கிறது. தொலைக்காட்சி தொகுப்பாளினியான ஐஸ்வர்யா இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே, அவர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு மேடையின் பக்கத்திலிருந்து தனுஷை பார்ப்பதற்காக அவரின் ரசிகர்கள் அலை மோதியிருக்கிறார்கள்.

   

அந்த சமயத்தில், ஒரு நபர் நடிகை ஐஸ்வர்யாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, அந்த நபரை தாக்குகிறார். அதன்பிறகு, அந்த நபரை ஐஸ்வர்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தனர். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.