அன்று சூர்யாவின் மகள்… இன்று அவருக்கே கதாநாயகியா?.. ஜில்லுனு ஒரு காதல் பாப்பாவா இது…?

திரைப்படங்களில் சிறு குழந்தையாக நடித்து ரசிகர்களை ஈர்க்கும் குழந்தைகள் சில வருடங்களுக்குள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் வளர்ந்து கதாநாயகியாக அறிமுகம்  ஆகிவிடுகிறார்கள். மேலும், முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக புடவையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு அசத்துகிறார்கள்.

   

அந்த வகையில், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் கடந்த 2006-ஆம் வருடத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்திருந்த குழந்தை ஸ்ரேயா சர்மா, தற்போது வளர்ந்து கதாநாயகி போல் இருக்கிறார். மேலும், சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை என்றும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, அவர் புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகிறார்கள்.