90s களின் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வந்தவர் அனுராதா. அனுராதா தனது பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவர் ஆறு வயதில் இருந்தே தனக்கான இசை பயிற்சியை தொடங்கினார். பாம்பே படத்தில் இடம்பெற்ற ‘மலரோடு மலரின்’ என்ற பாடலில் குரூப் பாடகராக பாடி சினிமா திரையுலகில் அறிமுகமானார்.
அது மட்டுமல்ல இவர் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதன் பின் ‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘அன்பென்ற மழையிலே’ என்ற பாடல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தற்போது இப்பாடல் கேட்டாலும் மெய் சிலிர்க்கும் அளவிற்கு இருக்கும். இதை தொடர்ந்து இவர் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவர் தமிழ் ,மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 3000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
1000 மேற்பட்ட இசைக்கச்சேரிகள் நடத்தியுள்ளார் அனுராதா ஸ்ரீராம். பாடகி அனுராதா ஸ்ரீராம். பரசுராமன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது இனிமையான குரல் மூலம் இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான பாடல் ஒன்றில் குருப் பாடகியாக பாடியுள்ளார்.
இவர் தனது பாடல் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார்.
இவர் கணவர் பரசுராமன் இந்தோ ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர். இதைத் தொடர்ந்து இவர் தன் கணவருடனும் ஒரு கச்சேரி செய்துள்ளார்.
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’ தற்போது சீனியர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அனுராதா ஸ்ரீராம் நடுவராக உள்ளார்.
தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.