
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னாடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.சிறுதொண்டநல்லூரில் உள்ள சிறீ முத்துமலையம்மன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியில் கல்லூரி படிப்பை மேற்கொண்டார்.
இவர் 1983 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.இவர் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் .அதைத் தொடர்ந்து தர்மதுரை, ஆயிசு 100,ஊர் மரியாதை. ஆசை, தெனாலி ,தமிழன் ,வில்லன், பகவதி, சாமி 2 , வேங்கை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி அவதூறு பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகர் பயில்வான். தற்போது இவர் பிக் பாஸிற்கு உள்ளே சென்ற கூல் சுரேஷ் பற்றி தனியார் சேனல் ஒன்று இன்டர்வியூ கொடுத்துள்ளார் .தற்போது அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram