
நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் அமரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் திரைப்படத்திலும் கமிட்டானதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது என்று வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. எனினும், 20 நாட்களுக்கான படப்பிடிப்பு மீதம் உள்ளதாம். எனவே சிவகார்த்திகேயன் அதனை முழுமையாக முடித்துவிட்டு ஏ ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடிக்க செல்லலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்.
ஆனால் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், சல்மான்கானை வைத்து எடுக்கும் திரைப்படத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளதாம். அத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பை ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்க வேண்டும் என்று கூறப்படுவதால் முதலில் சிவக்கார்த்திகேயன் திரைப்படத்தை நான்கு மாதங்களில் முடித்துவிட்டு அங்கு செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளார்.
எனவே சிவகார்த்திகேயனிடம், தொடர்ச்சியாக கால்சீட் கொடுத்து விடுங்கள். இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு, அதன் பிறகு அமரன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் நீங்கள் கலந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். சிவகார்த்திகேயனும் வேறு வழியின்றி அதற்கு சம்மதித்து விட்டதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.