
இயக்குனர் R. ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இதனிடையே தயாரிப்பாளர் கே ஜே ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், வலைப்பேச்சில் பிஸ்மி இது குறித்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, அயலான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே ஜே ராஜேஷிற்கு உடல் நலம் சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை சிவகார்த்திகேயன் தொலைபேசியில் கூட நலம் விசாரிக்கவில்லை.
ஏனென்றால், இதற்கு முன்பு கேஜே ராஜேஷ் சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்த ஹீரோ திரைப்படமும் தோல்வியடைந்தது. ஆக, உங்களால் எனக்கு இரண்டு திரைப்படங்களில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, சம்பளம் வாங்காமல் ஒரு திரைப்படத்தை நடித்துக் கொடுத்து அதனை ஈடு கட்ட வேண்டும் என்று கேஜே ராஜேஷ் கேட்டாராம்.
ஆனால் அதனை சிவகார்த்திகேயன் மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக வலைப்பேச்சில் பிஸ்மி கூறியுள்ளார்.