ஊரெல்லாம் தளபதி பேச்சு தான்… அந்த கலவரத்துல… சிம்புவை கண்டுக்காம விட்டுட்டாங்களே…?

சிம்புவின் 48-ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில், அத்திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளி வந்திருக்கிறது.

   

ஆனால் தளபதி விஜய் நேற்று தன் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டவுடன் இணையதளங்கள் முழுவதும் அந்த பேச்சு தான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. மேலும், அனைத்து செய்தி தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் என்று தளபதி விஜய் அரசியலுக்கு வந்த கருத்து தான் பேசப்பட்டது.

அதனால், சிம்புவின் 48 வது திரைப்படம் குறித்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார். மேலும், சிம்புவின் பிறந்தநாளான இன்று அந்த போஸ்டர் வெளிவந்திருந்தால் வரவேற்பை பெற்றிருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.