விருது வழங்கும் விழாவில் தளபதி விஜயை குழப்பிய மாணவிகள்…  இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து தற்பொழுது லியோ திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இத்திரைப்படத்தை எதிர்பார்த்தும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் விஜய் சினிமாவில் மட்டுமின்றி மக்கள் நலனிலும், மாணவர்கள் நலனிலும் அக்கறை கொண்டவர்.

   

இதற்காக அவர் தொடங்கியதே விஜய் மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று நடிகர் விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களை சந்தித்தார்.

அப்பொழுது 10,12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை நடிகர் விஜய் வழங்கினார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கான மொத்த செலவு ரூ.2 கோடி என்றும் கூறப்படுகிறது.

தற்பொழுது சிறப்பாக நடந்து முடிந்த விஜய் கல்வி விருது வழங்கும் விழாவை பற்றிய நிகழ்வுகள் தான் அதிகம் சமூக வலைத்தளங்களில்  பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த வகையில் தற்பொழுது விருது வழங்கும் விழாவில் மூன்று மாணவிகள் இணைந்து நடிகர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பொழுது அவரை குழப்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….