பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய காஜல் அகர்வால்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘பழனி’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து  தமிழில் சினிமாவில் முன்னணி  நடிகர்களான தனுஷ் ,விஜய் , அஜித் உள்ளிட்ட டாப்  நடிகர்களின் படத்தில் நடித்து டாப் ஹீரோயினி ஆனார்.

   

 

அதைத் தொடர்ந்து காஜல் அகர்வால் பிஸியாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.  நடிகை காஜல் அகர்வால்   மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் கிச்சிலி என்பவரை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நீல் என்ற ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த காஜல், தற்போது நடிப்பில்  கவனம் செலுத்தியுள்ளார் . நடிகை காஜல் அகர்வால் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த சூழலில் தான் காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் காஜலை கண்ட ரசிகர்கள் பெரும் ஷாக்காகி இருக்கிறார்கள். அந்த புகைப்படத்தில்  அவர் முகத்தில் எதோ ஒரு மாற்றம் உள்ளது. ஆனால்  என்ன என்பது தெரியவில்லை. ரசிகர்கள் காஜல் அகர்வால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா? அல்லது வேறு எதுவம் பிரச்சனையா? என கமெண்ட் செய்து வருகிறார்கள்.