திகில் சீரியலை களம் இறக்கும் சன் டிவி.. ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள்..

இப்போதெல்லாம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலரையம் கவர்ந்துள்ளது. சீரியல்களுக்கு என்று பெயர் போன டிவி தான் சன் டிவி இந்த சீரியல் காலை 10 மணி முதல் இரவு வரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

   

பெரும்பாலும் அனைத்து சீரியல்களுமே குடும்ப உறவுகளை மையப்படுத்தியே திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருகிறது.எதிர்நீச்சல்,சுந்தரி மற்றும் கயல் போன்ற முக்கிய சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக வருகிறது.பல வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையில் ‘திகில்’ மட்டும் ‘பக்தி’ சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தது காலப்போக்கில் அவை நின்று விட்டது.

தற்போது மீண்டும் ‘அனாமிகா’ என்ற புதிய திகில் சீரியல் ஒன்றை சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. மே 19ஆம் தேதி முதல் ‘அனாமிகா’ஒளிபரப்பாக உள்ளது.  இந்த  சீரியல் தர்ஷக்ஆகாஷ் பிரேம்குமார் அக்‌ஷதா தேஷ்பாண்டே உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த சீரியலில் நடிக்க உள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் இந்த சீரியலை எதிர்பார்த்து காத்துள்ளனர்.இணையத்தில் வைரலாகும் ப்ரோமோ வீடியோ