விரைவில் முடிய போகும் சன் டிவி சீரியல்… சோகத்தில் ரசிகர்கள்…

இப்போது எல்லாம்வெளித்திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு  என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் டூப்பராக பிரைம் டைமில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலானது  2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது இந்த சீரியலில் டிக் டாக் மூலம் பிரபலமான கேப்ரில்லா செலஸ் முன்னணி கதாநாயக  இதில் நடித்துள்ளார்.

   

இவருடன் ஜிஷு மேனன், கிருஷ்ணா, ஸ்ரீ கோபிகா நீலநாத், லிதன்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.இந்த சீரியல் கதை கிராமத்தில் பிறந்து வளரும் சுந்தரி என்கிற பெண், ஐ ஏ எஸ்  கனவை எப்படி எல்லாம் நினைவாக்க  போராடுகிறார் என்பதை கதைக்களமாக கொண்டு முதல் பாகத்தில் காட்டப்பட்டது. தற்போது சுந்தரி இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஐஏஎஸ் அதிகாரியான சுந்தரியின் வீர செயல்களை மையமாக கொண்டு  இந்த இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சுந்தரியின் முதல் கணவர் கார்த்தி இறந்து  விட்டதாக நம்ப பட்ட நிலையில் மீண்டும் உயிருடன் வந்த கார்த்தி தற்போது சுந்தரியிடம் இருந்து மகளை பிரிக்க முயன்று வருகிறார். கார்த்தியின் முயற்சியை முறியடித்து எப்படி கிருஷ்ணாவுடன்  சுந்தரி சேரப் போகிறார் என எதிர்பார்ப்பு உடன் மக்கள் மத்தியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது .

இந்நிலையில் நடிகர் ஜிஷு மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அணு மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இறுதியாக என பதிவிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் சுந்தரி சீரியல் முடியப் போகிறதா..! என்று பலரும் தங்கள் கருத்துக்களையும்  பதிவு செய்து வருகின்றனர்.இந்த போஸ்ட் வெளியாகி வைரலாகி வருகிறது.