
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரமலானை கொண்டாடிய நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இஸ்லாமியத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.
அது மட்டும் இல்லாமல் முஸ்லிமாக இல்லாத பிற மதத்தை சேர்ந்த நடிகர், நடிகைகளும் ரம்ஜானுக்கு முஸ்லிமாக மாறி புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.
அந்த வகையில் பிரபல நடிகர் விஷால் மசூதிக்கு சென்று அங்கு நமாஸ் செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கம்பம் மீனா தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
அதேபோல் நடிகை பிரியாமணி மற்றும் நதியா போன்றவர்கள் தங்களிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும் நடிகை அதுல்யா ரவி நமாஸ் செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
பிரபல தொகுப்பாளனியான மணிமேகலையும் மசூதிக்கு அருகில் நின்று புர்கா அணிந்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியிருந்தார்.
மேலும் நடிகர் ரகுமான் தனது மனைவி மற்றும் மகள் பேரக்குழந்தை என குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த புகைப்படங்கள் இதோ…