
பொதுவாக நகைச்சுவை நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். எந்த மொழியாக இருந்தாலும் நகைச்சுவை காட்சிகள் தான் மக்கள் மத்தியில் எளிதில் போய் சேர்கிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்திலுக்கு தனி இடம் இருந்தது. அவர்களுக்கான காலகட்டத்தில் நகைச்சுவை மன்னர்களாக இருவரும் வளம் வந்தனர்.
ஆனால், ஒரு காலகட்டத்திற்கு பிறகு, அவர்களின் நகைச்சுவை எடுபடவில்லை. அதன் பிறகு, வடிவேலு மற்றும் விவேக் நகைச்சுவைகள் தான் ரசிகர்களிடைய அதிக வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, வடிவேலு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சமயங்களில் சந்தானம் சூரி போன்றோரின் நகைச்சுவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு, சதீஷ், யோகி பாபு போன்ற பலர் நகைச்சுவை நடிகர்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தெலுங்கு திரையுலகில் பிரம்மானந்தம் நீண்ட வருடங்களாக நகைச்சுவை நடிகராக நீடித்துக் கொண்டிருக்கிறார். தமிழிலும் மொழி உட்பட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருக்கிறார்.

தமிழில் கவுண்டமணி போன்றவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு என்று ஒரு பீரியட் இருந்தது. அதன் பிறகு, அவர் நகைச்சுவை எடுபடவில்லை. எனவே, கவுண்டமணி படிப்படியாக நிறுத்திக்கொண்டார். ஆனால், பிரம்மானந்தம் தொடர்ந்து நகைச்சுவை நடிகராகவே நீடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம் தான் என்று தெரிவித்திருக்கிறார்.