தங்க மீன்கள் குழந்தையா இது…? அடுத்த கதாநாயகி ரெடி… வைரலாகும் புகைப்படம்…!

இயக்குனர் ராம் இயக்கி அவரே கதாநாயகனாக நடித்திருந்த தங்கமீன்கள் திரைப்படம் கடந்த 2013 ஆம் வருடத்தில் வெளிவந்தது. அத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அத்திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்திருந்த சாதனா என்ற சிறுமி படம் முழுக்க தன் வெகுளியான நடிப்பால் கவர்ந்திருப்பார்.

   

அச்சிறுமியின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது. தேசிய விருது பெற்ற அத்திரைப்படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது, பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் வரிகளில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் தான். மகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அத்தனை தந்தைகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் அந்த பாடல் இருந்தது.

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது நா.முத்துக்குமாருக்கு கிடைத்தது. மேலும், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் சிறுமி சாதனாவிற்கு கிடைத்தது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு சிறுமி சாதனாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. வைரலாகும் புகைப்படத்தில் இயக்குனர் ராமுடன் இருக்கும் சாதனா கையில் விருது ஒன்றை வைத்திருக்கிறார்.