விஜய் மற்றும் திரிஷா வின் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்… அட இதுதான் காரணமா… வைரலாகும் செய்தி…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் தற்போது இவரின் ‘லியோ’ படமானது விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு  ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.  சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில்  குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார் நடிகை திரிஷா. நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளனர்.

   

‘லியோ’ திரைப்படத்தின் மூலமாக 13 ஆண்டுகளுக்குப் பின் ஜோடியாக நடித்துள்ளார்கள்.கடந்த சில நாட்களுக்கு முன் விஜய், திரிஷா இருவருக்கும் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது . இந்த புகைப்படம் வெளிவந்த அடுத்த நிமிடத்தில் இருந்து இருவரும் காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம் என பல சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டது.

இந்நிலையில் அனைத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த புகைப்படம் லியோ படத்தில் இருந்து வெளியாகி உள்ளது .இந்த புகைப்படத்தை பதிவு செய்தவர்களிடம் காப்பி ரைட்ஸ் அடித்துள்ளது லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ். இதன்மூலம் விஜய், திரிஷா குறித்து பரவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளனர்.