‘ஜெயிலர்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. அடேங்கப்பா இத்தனை கோடியா!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ஆரணியை பூர்வீகமாக கொண்டவர்.  விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’என்ற ரியாலிட்டி ஷோவில் உதவிய இயக்குனராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு அமீர் நடிப்பில் வெளியான யோகி திரைப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்தார்.

   

அதை தொடர்ந்தது ஆடவன் கட்டளை, கோலமாவு கோகிலா, மண்டேலா, டாக்டர், லவ் டுடே,   வீரம்,  காக்கி சட்டை,  கிருமி,  டாக்டர்,   போன்ற படங்களில்  நடித்துள்ளார். தமிழில்   சுமார் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’  திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இப்படத்தை  இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார்.பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வசூல் சாதனையை உலகளவில் படைத்து வருகிறது. இப்படத்திற்கு  நடிகர் யோகி பாபு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவர்  இப்படத்திற்கு  வாங்கிய சம்பளம்  ரூபாய் ஒரு கோடி. தற்போது இந்த செய்தியானது இணையத்தில்  வைரலாகி வருகிறது.