நடிகை சாய் பல்லவியா இது?…. பாரம்பரிய படுகா இன உடையில் செம்ம அழகா இருக்காங்களே… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தின் பாரம்பரிய படுகா இன உடையில் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

நடிகை சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உங்களிள் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் இவர் தமிழில் வெளிவந்த ‘தாம் தூம்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு மலையாளத்தில் ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தில் ‘மலர் டீச்சர்’ ஆக அறிமுகமாகி திரையுலகில்  பிரபலமானார்.

   

இதை தொடர்ந்து அவர் தமிழில் மாரி 2, என் ஜி கே போன்ற திரைப்படங்களில் தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்க்கி திரைப்படம் ரிலீஸாகி மக்களிடையே வரவேற்பு பெற்றது. தற்பொழுது இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

அதிக மேக்கப் இல்லாத இவரது முகம், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற இவரது தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று கூறலாம். தற்போது இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி வருகின்றன. இவரது நடனமும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாய்பல்லவியின்  சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

நடிகை சாய் பல்லவி கோத்தகிரி பகுதியில் உள்ள படுகா இனத்தைச் சேர்ந்தவர். இவர் படுகா இனத்தில் இருந்து முதல் முறையாக திரையுலகில் நுழைந்து சாதனை படைத்தவரும் நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை சாய் பல்லவி தற்பொழுது தன்னுடைய பாரம்பரிய உடைகளை அணிந்து  குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை சாய் பல்லவியா இது? செம்ம அழகா இருக்காங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.