சார்பட்டா பரம்பரை ‘டாடி’ ஜான் விஜய் யார் தெரியுமா?… அவரைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திடாத பல சுவாரசியமான தகவல்கள் இதோ…

‘சார்பட்டா பரம்பரை’ நடிகர் ஜான் விஜய் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

கோலிவுட்டில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் தான் நடிகர் ஜான் விஜய். இவர் வீடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக முன்னேறி பல முன்னணி நடிகர்களின் படங்களில் தற்பொழுது நடித்து வருகிறார்.

   

வில்லன் கதாபாத்திரத்தில் தனது நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் அனைவரையும் சிரிக்க வைத்து மிரட்டியிருப்பார். சமீபத்தில் இவர் நடிப்பில் சார்பட்டா பரம்பரை படம் வெளியானது. இது அவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது என்றே கூறலாம். இதில் ஆர்யா, பசுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் நடிகர் ஜான் விஜயின் டாடி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

தற்பொழுது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் அவ்வளவு எளிதாக இந்த உயரத்தை எட்டி விடவில்லை.இவரைப் பற்றிய  சுவாரசிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் ஜான்விஜய் 1976ல் சென்னையில் பிறந்தார். லயோலோ காலேஜில் படித்து சினிமாவில் இணைய வேண்டும் என்ற ஆசையை திரையுலகில் கால் பதித்தார்.

இவர் முதன் முதலில் ‘ஓரம் போ’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாராம். இதைத் தொடர்ந்து பில்லா, ராவணன், கோ என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 2011ல் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து மௌனகுரு, கலகலப்பு, கபாலி,, துப்பறிவாளன், மிஸ்டர் லோக்கல், பூமி என பல திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார். தனது விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் தற்பொழுது சிறந்த அடையாளத்தை பெற்று பிரபல நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகர் ஜான்விஜய்.