சிறுத்தை படத்தில் வந்த கார்த்தியின் ரீல் மகளா இது.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். ‘பருத்திவீரன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவருக்கு அவரது முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று, வசூலையும் வாரி குவித்து வருகிறது.

   

நடிகர் கார்த்தியின் திரை வாழ்க்கை மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்த படம் சிறுத்தை. இத்திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் ,வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.

இப்படத்தில் கார்த்தி உடன் இணைந்து தமன்னா, சந்தானம் உள்ளிட்ட பல திரை உலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  தற்பொழுது இத்திரைப்படத்தில் க்யூட்டான குழந்தையாக படத்தின் முக்கிய கதாபாத்திரமாக, கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷனா நடித்திருப்பார். மேலும் இவர் ஓ காதல் கண்மணி மற்றும் பாண்டியா நாடு உள்ளிட்ட படங்களிலும் பேபி ரக்ஷனா நடித்துள்ளார். இவரின் சமீபத்திய படம் தற்போது வைரலாகி வருகிறது.

தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஹீரோயின் போல வளர்ந்துட்டாங்களே இன்று கமெண்ட் செய்து வருகின்றனர்.