
தமிழில் முன்னணி கதாநாயகர்கள் அனைவரும் தங்களை உயர்த்திவிட்ட தமிழ் தயாரிப்பாளர்களை மறந்துவிட்டு தெலுங்கு, மலையாளம் போன்ற தயாரிப்பாளர்களுக்கு கால்சீட் கொடுத்து வருகிறார்கள் என்று வலைப்பேச்சு பிஸ்மி தகவல் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, நடிகர் அஜித்குமார் தற்போது தெலுங்கு தயாரிப்பாளரின் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதே போன்று, நடிகர் விஜய்யும் தன் அடுத்த திரைப்படத்திற்கு RRR திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு தான் கால்ஷீட் கொடுத்துள்ளார். அவருக்கு தெலுங்கு தான்.
அதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பு யுவி கிரியேஷன். அதுவும் தெலுங்கு தயாரிப்பாளர் தான். நடிகர் தனுஷ் நடிக்கும் குபேரா திரைப்படத்தின் தயாரிப்பாளரும் தெலுங்கு தான். நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் தெலுங்கு தான்.
மேலும், நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மலையாளம். எனவே, தமிழின் முன்னணி கதாநாயகர்கள் அனைவரும் பிற மொழி தயாரிப்பாளர்களுக்கு தான் கால்சீட் கொடுக்கிறார்கள். என்ன இருந்தாலும், தங்களை வளர்த்து விட்ட தமிழ் தயாரிப்பாளர்களை மறந்து விட்டனர் என்று பிஸ்மி கூறியுள்ளார்.