மன்சூர் அலிகான்..! சர்ச்சைக்கு மத்தியில் சைலெண்டா… பான் இந்தியா ஸ்டாருடன் கைகோர்த்த திரிஷா…!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா, கடந்த வருடத்தில் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளி வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார். அதில் குந்தவையாக மக்கள் மனங்களில் இடம் பிடித்தார்.

அதனைத்தொடர்ந்து, தளபதி விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்து மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகர் அஜித்குமார் உடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கிறார்.

   

இது மட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்திலும் இணைய உள்ளார். இத்திரைப்படத்திற்காக திரிஷா 12 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரிஷா தற்போது தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

அந்த திரைப்படம் 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கிறது. இது தவிர பாலிவுட்டிலும் நடிகை திரிஷாவிற்கு அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. எனவே, தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் நடிகை திரிஷா.