
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகரான வைகை புயல் வடிவேலு ஒரு காலகட்டத்தில் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்தார். அதன் பிறகு சில காரணங்களால் திரையுலகை விட்டு விலகி விட்டார். அதன் பிறகு, மீண்டும் திரைப்படங்களில் நடித்த போதும் முன்பை போல அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, வடிவேலு நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. தற்போது மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், நேற்று தன் தாய் மறைந்து ஒரு வருடம் கடந்த நிலையில் அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரர் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார்.
அதன் பிறகு பத்திரிகையாளர்களை வடிவேலு சந்தித்தார். அவரிடம் விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி கேள்வி கேட்டனர். அவ்வளவு தான் என நக்கலாக பதிலளித்துவிட்டு தப்பிக்க பார்த்தார். அவரை விடாமல் பத்திரிக்கையாளர்கள் மீண்டும் அது பற்றி கேள்வி கேட்டார்கள். அப்போது அவர் தெரிவித்ததாவது, மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்.
நீங்கள் கூட வரலாம். யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று நம்மால் கூற முடியாது. டி.ராஜேந்தர், ராமராஜன், பாக்கியராஜ் ஆகியோரும் அரசியலுக்கு வந்தார்கள். எல்லோரும் நல்லது செய்யத்தானே வந்தார்கள் என்று கூறியிருக்கிறார்.