
கலைஞர் நூற்றாண்டு விழா கடந்த ஆறாம் தேதி அன்று சென்னையில் உள்ள கிண்டியில் வெகு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். விழா நிறைவடைந்த பிறகு, ரஜினி, கமல் உட்பட ஒவ்வொரு முன்னணி நாயகர்களாக தங்களது வாகனங்களில் புறப்பட்டு சென்றார்கள்.
ஆனால் வடிவேலுவை மட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. தனியாக வந்து கொண்டிருந்த அவருக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் டிரம்ஸ் சிவமணி தன் குடும்பத்தினரோடு ஏறி அமர்ந்து கொண்டார். அவரிடம் இது வடிவேலுவிற்கு கொண்டு வரப்பட்ட வாகனம் என்று கூறியவுடன் அவன் எல்லாம் ஒரு ஆளா? என்று ஒருமையில் திட்டி விட்டு சென்றது, அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், மற்றொரு வாகனத்தின் பின்புறத்தில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுடன் வடிவேலு அமர்ந்து சென்றிருக்கிறார். கேப்டனுக்கு வடிவேலு செய்த துரோகம் தான் திரையுலகமே அவரை ஒதுக்கியதற்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.