
இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமலேயே வாழ்ந்துவருகிறார். அவர் திருமணம் செய்துகொள்ளப்போவதாக பல வதந்திகள் அவ்வப்போது இணையத்தளங்களில் உலா வரும். மேலும், தன் சகோதரர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் திரைப்படங்களில் மட்டும் தவறாமல் இடம்பிடித்து விடுவார்.
அவர் இல்லாமல் வெங்கட் பிரபு திரைப்படங்களே இயக்குவதில்லை என்று கூறலாம். இந்நிலையில் இந்த வருடம் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளப்போவதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவரின் சகோதரியான பாடகி பவதாரிணி உயிரிழந்த சம்பவம் இளையராஜாவின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருப்பதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு பிரேம்ஜி திருமணத்திற்கு தயாராகி உள்ளார். இந்த சமயத்தில் அவரது சகோதரி பவதாரணி மரணம் அடைந்ததால் ஒரு வருடத்திற்கு அவர்கள் வீட்டில் சுப காரியங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.