கோர்ட்டு பக்கத்துல வீடு வாங்க முடியாது… அன்னப்பூரணி விவகாரத்தில்… ஸ்மார்ட்டா முடிவெடுத்த நயன்தாரா… வெளிவந்த ரகசியம்…!

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய திரை உலகை கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர் சமீபத்தில் அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அத்திரைப்படத்தில் ஐயர் வீட்டு பெண்ணாக பிறந்து வளர்ந்த ஒருவர் சமையல் துறைக்கு  செல்லும்போது அசைவ உணவுகளை சமைப்பது சாப்பிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் பல சர்ச்சைகளில் சிக்கிவிட்டது. கடவுள் மீது அதிக பக்தி கொண்ட வட இந்தியாவை சேர்ந்தவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

   

அதற்கு உடனடியாக மன்னிப்பு தெரிவித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு விட்டார். இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, நயன்தாரா மிகவும் புத்திசாலி. அவருக்கு நன்றாகவே தெரியும். மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசத்தில் இவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டால் அங்கு சென்று இவர் நீதிமன்றத்திற்கு அருகிலேயே வீடு எடுத்து தான் தங்க வேண்டும்.

அந்த அளவிற்கு தன் வாழ்க்கை நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் மாறிவிடும் என்று உணர்ந்தவர், உடனடியாக மன்னிப்பு கேட்டு விட்டார். வழக்குகளால் அவரின் சினிமா வாழ்க்கையும் பாதிக்கப்படும். அதனை விரும்பாத நயன்தாரா தன் அறிக்கையில் தொடரும்போதே ஜெய் ஸ்ரீ ராம் என்று போட்டு சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

அது மட்டுமல்லாமல் அடிப்படையில் அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் பிரபுதேவாவை காதலித்தபோது இந்து மதத்திற்கு மாறினார். அதன் பிறகு தற்போது வரை இந்து கோவில்களுக்கு சென்று கொண்டு தான் இருக்கிறார். எனவே, அவர் எம்மதமும் சம்மதம் என்பதை வாய் வார்த்தையாக கூறவில்லை.

இதனால் அவரை குறை கூறுவதற்கு எதுவும் கிடையாது. வட இந்தியர்கள் ராமர் மற்றும் அனுமன் போன்ற விஷயங்களில் மிகவும் சென்சிடிவ் ஆக இருக்கிறார்கள். எனவே, தான் நயன்தாரா நான் அதற்கு எதிரானவள் கிடையாது என்று மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டு விட்டார் என்று தெரிவித்துள்ளார்.