
தன் பாடல்களால் நீண்ட காலமாக ரசிகர்களை கட்டி போட்டுக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி மரணமடைந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இலங்கைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்ற சமயத்தில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் இறப்பிற்கு திரை பிரபலங்கள் பலர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வலைப்பேச்சு அந்தணன் இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி மரணம் அடைந்ததற்கு பல நடிகர்கள் இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் தெரிவித்திருப்பதாவது, நடிகர் சூர்யா இணையத்தில் பவதாரிணிக்காக ஒரு இரங்கல் செய்தி வெளியிடாமல் இருப்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் மட்டுமல்லாமல், அஜித் விஜய் என்று பல நடிகர்களின் திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார். ஆனால், அவர்கள் யாருமே பவதாரிணி மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.