சூப்பர் ஸ்டார் வீட்டில் பாகப்பிரிவினை… அனிருத்திற்கு இங்கு இடமில்லை… சௌந்தர்யா ரஜினிகாந்த் தடாலடி…!

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் அவரின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த்தும் தான் ஒரு திரைப்படம் இயக்கப் போவதாகவும், அதற்கு நீங்கள் கால்ஷீட் தர வேண்டும் என்றும் ரஜினிகாந்த்திடம் கேட்டதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

   

மேலும், சொத்தில் மட்டுமல்ல கால்ஷீட்டையும் சமமாக பிரித்து கொடுக்கும் நிலையில் ரஜினிகாந்த் இருக்கிறார் என்று கூறிய அந்தணன், ரஜினிகாந்த்தும் பத்து நாட்களுக்கு கால்ஷீட் தருவதாக கூறிவிட்டாராம் என தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி. எஸ் தானு, ராகவா லாரன்ஸும் அந்த படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் அத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தை அணுகலாம் என்று தயாரிப்பாளர் தாணு கூறிய போது, சௌந்தர்யா ரஜினிகாந்த், வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அவர் வளர்ந்துவிட்டதால், தலைக்கனமாக இருக்கிறார். ஜிவி பிரகாஷை  போடலாம் என்று சௌந்தர்யா கூறியதாக அந்தணன் தெரிவித்துள்ளார்.