
நடிகர் சிம்பு என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. பரபரப்பாக அவரைப் பற்றி ஏதேனும் ஒரு செய்தி பரவிக் கொண்டுதான் இருக்கும். இந்நிலையில் அவரின் 48வது திரைப்படம் குறித்து எந்த தகவலும் நீண்ட நாட்களாக வெளிவரவில்லை. ஒரு வருடமாகவே STR-48 திரைப்படத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.
அந்த படம் என்ன ஆனது? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, STR-48 திரைப்படத்திற்கு பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
அத்திரைப்படத்தில் அதிகம் VFX காட்சிகள் இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்து வருவதால் தான் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதற்கு பின்னணியில் யாரோ சதி செய்வதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. சிம்புவின் படம் நிறுத்தப்பட்டது என்றும் தகவல் பரவி வருகிறது.
அது மட்டுமல்லாமல் சிம்புவை கேலி செய்யும் விதமாக பல வீடியோக்கள் ஒரே நேரத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதுக்கு பின்னணியில் யாரோ இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.