திரிஷா குளிச்ச வீடியோ… எல்லாத்துக்கும் நீங்க தா காரணம்… கொந்தளித்த வலைப்பேச்சு அந்தணன்..!

தற்போது இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது, நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து தரக்குறைவாக பேசிய கருத்து தான். அவர் பேசிய வீடியோ படு வைரலாக பரவியதை தொடர்ந்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. நடிகர், நடிகைகள் பலரும் அவருக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.

   

எனினும், தற்போது வரை தான் பேசிய கருத்து தவறு என்று மன்சூர் அலிகான் வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாக, அவருக்கே உரிய பாணியில் அலட்சியமாக பதிலளித்தார். இந்நிலையில், பிரபல பத்திரிகையாளராக இருக்கும் வலைப்பேச்சு அந்தணன் இந்த பிரச்சனை பற்றி தெரிவித்திருப்பதாவது, திரிஷா குறித்து ஆபாசமாக பேசியதற்கு விளக்கம் தெரிவித்த மன்சூர் அலிகான், போய் பொழப்ப பாருங்க என்று கூறியிருக்கிறார்.

ஆனால், அவர் தன் பொழப்பை பார்த்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. அவர் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த பிரச்சனையில் தென்னிந்திய நடிகர் எதற்காக அமைதியாக உள்ளார் என்று தெரியவில்லை. இதேபோன்று தான் பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகை திரிஷா தங்கி இருந்த நட்சத்திர விடுதியின் குளியலறையில் கேமரா பொருத்தி அவர் குளிக்கும் வீடியோ வெளியானது.

அப்போதே, தென்னிந்திய நடிகர் சங்கம் அந்த விவகாரம் பற்றி காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருக்க வேண்டும். அதை செய்திருந்தால் யார் கேமராவை வைத்தது? என்று கண்டுபிடித்திருப்பார்கள். நிச்சயம், அந்த ஓட்டலில் திரிஷா தங்கியிருந்த சமயத்தில், அவரின் அறையை சுலபமாக பயன்படுத்திய ஒரு நபர் தான் அந்த கேமராவை பொருத்தியிருப்பார். அது நடிகராகவோ அல்லது ஓட்டல் பணியாளர்களாக கூட இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.