
நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி இளம் கதாநாயகனாக உயர்ந்து தற்போது முன்னணி நாயகனாக ஜொலித்து கொண்டிருக்கிறார். அவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பல காதல் தோல்விகளை சந்தித்த அவருக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார்கள்.
அவ்வப்போது, அவரின் திருமணம் தொடர்பான வதந்திகள் இணையதளங்களில் வைரலாக பரவும். அந்த வகையில் சமீப நாட்களாக நடிகை வரலட்சுமியை சிம்பு திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் பரவி வருகிறது. மேலும் சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதியில் அது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது.
இதனால் அவரின் ரசிகர்கள், மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் சிம்புவின் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதாவது, சிம்பு, வரலட்சுமியும், நானும் நல்ல நண்பர்கள் தான். அவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது.
மேலும், வரலட்சுமியம் நானும் சிம்புவும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறிவிட்டார். எனவே, இரண்டு மூன்று நாட்களாக காட்டுத்தீ போல் பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.