
இயக்குனர் வாசு இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், பிரபு நடிகைகள் ஜோதிகா, நயன்தாரா மற்றும் வைகை புயல் வடிவேலு உட்பட பலர் நடித்து கடந்த 2005 ஆம் வருடத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இப்போதும் தொலைக்காட்சியில் அத்திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் சந்திரமுகி திரைப்படம் வரவேற்பு பெறுவதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அதில் இடம் பெற்றிருந்த சந்திரமுகி கதாபாத்திரம். நடிகை ஜோதிகா கங்கா மற்றும் சந்திரமுகியாக வியக்க வைக்கும் அளவிற்கு அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சர்யப்படுத்தியிருப்பார்.
அவரின் நடிப்பிற்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் சந்திரமுகி திரைப்படத்தில், பிற மொழிகளில் நடித்த நடிகைகளின் காட்சிகளை ஒப்பிட்டு வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், ரசிகர்கள் எந்த மொழியாக இருந்தாலும் தமிழில் நடித்த ஜோதிகா போல் வராது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் பலர் மலையாளத்தில் நடித்திருந்த நடிகை சோபனாவை பாராட்டியதோடு அவர் இத்திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கியதையும் குறிப்பிட்டு வருகிறார்கள்.