
அஜித் குமார் பொதுவாக எந்த விழாக்களிலும் பங்கேற்க மாட்டார். எனினும், அவர் படப்பிடிப்பிற்காக எங்கு சென்றாலும் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்து வைரலாகி விடும். தற்போது அவர் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இம்மாதம் 12ஆம் தேதி தொடங்கப்பட வேண்டிய விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பிற்கு தேவையான செட் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அங்கு சென்ற பட குழுவினர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு சென்று இருக்கும் மொத்த படக்குழுவினருக்கும் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும், இதனால் அந்த படத்திற்கு தேவையான பட்ஜெட் குறிப்பிட்ட அளவை விட தாண்டி விடும் என்றும் வலைப்பேச்சு அந்தணன் வலைப்பேச்சில் கூறியிருக்கிறார். மேலும், மற்றொருபுறம் சென்னையில் ஆதிக் ரவிச்சந்திரன்-அஜித் குமார் கூட்டணியில் உருவாகும் படத்திற்கான பூஜை அமைதியாக நடந்திருக்கிறது. அதற்கும் யாரையும் அழைக்கவில்லை என்று வலைப்பேச்சில் கூறியிருக்கிறார்கள்.