
நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட நாட்களாக அத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. எனினும் சரியாக அந்த திரைப்படம் குறித்து எந்த அப்டேட்களும் வெளிவரவில்லை. எனவே, ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
விடாமுயற்சி படம் என்ன ஆனது? எப்போது திரைக்கு வரும்? என்று தல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற வலைப்பேச்சு அந்தணனிடம் தொகுப்பாளர், விடாமுயற்சி திரைப்படம் பிரச்சனையில் சிக்கியதாக கூறப்படுகிறதே? அதற்கு அஜித் தான் காரணமா? அந்த படம் என்ன ஆனது? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த அந்தணன், விடாமுயற்சி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, லண்டனில் பெரிய தொழில் ஒன்றை செய்து கொண்டிருக்கிறது. அங்கு சிறிய அளவில் பண நெருக்கடி ஏற்பட்டதால் அங்கிருந்து வரும் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே தான், விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அது தவிர அஜித் குமாரால் எந்த பிரச்சனையும் திரைப்படத்திற்கு ஏற்படவில்லை.
பண நெருக்கடி என்பது எல்லோரும் சந்திக்கக்கூடிய ஒன்று தான். லைக்கா என்பது மிகப்பெரிய நிறுவனம். அதனை சமாளித்து விரைவில் படப்பிடிப்பை தொடங்கி விடுவார்கள். அதற்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது என்று தெரிவித்திருக்கிறார்.