புரொமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி… இளைய மகள் லாராவுடன்… வெளியான வைரல் வீடியோ இதோ ..!!

நடிகர் விஜய் ஆண்டனி மகள்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமாக வலம் வரும் நடிகர் விஜய் ஆண்டனியின் மூத்த மகளான மீரா, கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அண்மையில் இறந்த தனது மகள் மீரா பற்றி, விஜய் ஆண்டனி சோசியல் மீடியாவில் உருக்கமாக  பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

   

அதில் “என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள் மற்றும் அவளுடன் நானும் இறந்துவிட்டேன் என்றார். மேலும் தற்போது அவள் ஜாதி, மதம் , பணம் , பொறாமை அற்ற அமைதியான இடத்திற்கு சென்று இருக்கிறாள். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன் என்றார்.

அவள் பெயரில் நான் செய்ய போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்.” இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுட்டிருந்தார். இந்த பதிவானது அனைவரது மனதையும் கலங்கடித்த நிலையில், விரைவில் இவர் நடித்த ரத்தம் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

எனவே இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்கு நேற்று வந்த நடிகர் விஜய் ஆண்டனி, தனது இளைய மகள் லாராவையும், உடன் அழைத்து வந்தார். அப்போது விஜய் ஆண்டனி கண்கள் நிறைய சோகம் மற்றும் மனது முழுக்க வலியுடன் இந்த நிகழ்வில் பங்கேற்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ…