நடனத்தில் பின்னி பெடல் எடுத்த நடிகை.. எப்டிமா இப்டி ஆடுனீங்க.. வியந்து போன தளபதி.. வைரலாகும் வீடியோ..!

இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை சாயாசிங் நடித்து கடந்த 2003 ஆம் வருடத்தில் வெளியான திருடா திருடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அத்திரைப்படத்தில் எலியும் பூனையுமாக அடித்துக்கொள்ளும் தனுஷ் மற்றும் சாயா சிங் இறுதியில் எப்படி ஒன்னு சேருகிறார்கள் என்பது தான் கதை.

   

காதல், காமெடி கலந்து தன் அறிமுக படத்திலேயே வெற்றிபெற்றார் இயக்குனர். குறிப்பாக அத்திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கும் மன்மத ராசா என்ற பாடல் பட்டிதட்டி எங்கும் பிரபலமானது. அந்த பாட்டிற்கு வைப் செய்யாத 90ஸ் குழந்தைகளே இல்லை. அந்தப் பாடலில் சாயா சிங் அணிந்து வரும் ஆடையும் அப்போது பிரபலமாக பேசப்பட்டது.

தற்போது வரை சாயாசிங் என்றாலே அந்த பாடல் தான் நினைவுக்கு வரும். இந்நிலையில் தளபதி விஜய் சாயா சிங்கை மன்மத ராசா பாடலுக்காக பாராட்டிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

அதில் விஜய், நடிகை சாயா சிங்கிடம் மன்மத ராசா பாடலில் எப்படி அப்டி ஆடுனீர்கள்? என்று சிரித்துக்கொண்டே கேட்கிறார். அதற்கு வெட்கப்பட்டுக்கொண்டே சாயாசிங் தெரியலங்க என்று பதிலளிக்கிறார். வீடியோவை பார்த்த ரசிகர்கள், அந்த பாடலில் சாயா சிங் செமையாக ஆடியிருப்பார் என்று பாராட்டி வருகிறார்கள்.