என்ன பாக்குறதுக்கு டாம் அண்ட் ஜெரியைப் போலவே இருக்கு….. மிரட்டும் எலி….. அஞ்சு நடுங்கும் பூனை….. வைரலாகும் வீடியோ…!!!

பூனை எலியை பிடித்து பார்த்திருப்பீர்கள், ஆனால் எலி பூனையை மிரட்டி பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகின்றது. குழந்தை பருவதில் நாம் அனைவரும் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பார்த்திருப்போம். அவர்களின் நிஜ வாழ்க்கையின் பாதிப்புதான் இந்த வீடியோ.

   

ஆம் டாம் அண்ட் ஜெர்ரியின் கதாபாத்திரத்தைப் போலவே பூனையும் எலியும் ஒன்றை ஒன்று துரத்தி சண்டை போடுவதை காட்டும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இதனை ஒரு ட்விட்டர் பயனாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளை பூனையும், ஒரு சிறிய எலியும் ஒன்றை ஒன்று சண்டை போடுகின்றது.

டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பெரிய அளவில் இருக்கும் பூனையானது சின்னஞ்சிறு எலியிடம் படாத பாடுபடும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அந்த கார்ட்டூனை ரசித்து பார்ப்பார்கள். அந்த வகையில் தற்போது வெளியான வீடியோவில் எலி மிரட்ட பூனை பயப்படுகின்றது. இது பார்ப்பதற்கே சிரிப்பாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…