
சன் மியூஸிக் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் விஜே.அஞ்சனா. பின்னர் இவர் சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் இவர் முன்னணி நடிகர்களின் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் திறமையாக தொகுத்து வழங்கி, இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டு பிரபலமானவர்.

இவர் நடிகர் கயல் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் கணவர் சந்திரன், கயல் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவ்வாறு விஜேவாக பிசியாக வலம் வரும் அஞ்சனா, வித விதமாக போட்டோஷூட் நடத்தி, இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
