தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், பிரபுதேவா என பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 90 களில் நடிகை சிம்ரன் மிக அதிகமான ரசிகர்களை கொண்ட கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் ‘இடுப்பழகி சிம்ரன்’ என்று தனது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.47 வயதாகும் நிலையில், தற்போதும் சிம்ரன் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார் நடிகை சிம்ர. மேலும், தமிழில் VIP என்ற படத்தில் நடிகர் பிரபுதேவா ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சிம்ரன். ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்துகொண்ட இவர், திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு Bye சொல்லிவிட்டார். மேலும், சமீபத்தில் மகான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
2003-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் ஹீரோயின் சிம்ரன் ஆகவே வந்து நடித்திருப்பார். சிம்ரனும் சூர்யாவும் இணைந்து “தகதக.. தகதகவென ஆடவா” உள்ளிட்
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த பாடலுக்கு தற்போது மரண குத்து குத்தி இருக்கும் புதிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், அதற்கு கேப்ஷனாக நடனம் தான் எனது மொழி என்றும் பதிவிட்டு இருக்கிறார். அந்த பாடலைப் பார்த்து ரசிகர்கள் அடேங்கப்பா அப்படியே ரீக்ரியேட் பண்ணிட்டீங்களே மேடம் என பாராட்டி வருகின்றனர்.