நடிகர் ரமேஷ் கண்ணா 90களில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசி இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, உதயநிதி ஸ்டாலினை நம்பாதீர்கள்.
ஆதவன் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் மட்டும் அவர் நடித்திருப்பார். அப்போது அந்த காட்சியை நான் தான் இயக்கினேன். அவரிடம், “உங்களை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படம் இயக்குவேன்” என்று கூறினேன். அதற்கு அவர், சார் ஏதோ, ரவி சார் கேட்டதற்காக ஒரு காட்சியில் நடித்தேன்.
திரைப்படத்தில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் நடிக்க வந்து விட்டார். அதன்பிறகு, அவரை பார்த்த போது, என்ன சார் நடிக்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்துட்டீர்களே? அடுத்து அரசியல் தானே? என்று ஜாலியாக பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சார் நடிக்க ஏதோ வந்து விட்டேன்.
அரசியலுக்கு எல்லாம் வரவே மாட்டேன் என்று கூறினார். ஆனால் இப்போது அரசியலுக்கும் வந்து விட்டார். எனவே அவர் கூறுவது எதையும் நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.