என்னடா நடக்குது இங்க… காதலிச்சு ஏமாத்திட்டான்.. போஸ்டர் ஒட்டிய பெண்… அப்படி என்ன நடந்தது..?

முகநூல் பக்கத்தில் ஒரு நபர் காதலித்து ஏமாற்றியதாக தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டிய 4 பேர் கைதாகி உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொங்கம்பட்டி கிராமத்தில் வசிக்கும் 28 வயதுடைய இளைஞர் ரோஷன். இவர், முகநூல் பக்கத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த 31 வயது பெண்ணான உஷா என்பவருடன் பழகி இருக்கிறார். அதன் பிறகு, உஷாவின் நடவடிக்கை ரோஷனுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது.

   

எனவே, தன் முகநூல் பக்கத்தை முடக்கியதோடு, உஷாவின் நம்பரையும் பிளாக் செய்து விட்டார். ரோஷனின் இந்த செயல் உஷாவை ஆத்திரமடையை செய்தது. எனவே, காதலித்து ஏமாற்றி விட்டான் என்று இருவரும் ஒன்றாக இருப்பது போன்று புகைப்படத்தை எடிட் செய்து போஸ்டர் அடித்து ஒவ்வொரு தெருவாக சென்று ஒட்டியுள்ளார்.

இது மட்டுமல்லாமல், தன் நண்பர்களுடன் சேர்ந்து உஷா, ரோஷனின் தந்தையை விரட்டி ஐந்து லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து ரோஷனின் தந்தை புகார் அளித்துள்ளார். அதன்படி, உஷாவுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்த சௌந்தரராஜன், சிவஞானம் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் கைதாகி உள்ளனர்.

காவல்துறையினர், உஷா என்ற அந்த பெண் இதே போன்று பல இளைஞர்களை காதல் வலையில் சிக்க வைத்து பணம் பறித்திருப்பார் என்று சந்தேகமடைந்துள்ளனர். எனவே, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.