‘ஆம்.. என்னை விட வயதில் மூத்த நடிகையை தான் காதலிக்குறேன்’…. விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்த ‘பசங்க’ பட நடிகர்…

‘பசங்க’ பட நடிகர் கிஷோரை விட சீரியல் நடிகை ப்ரீத்தி நான்கு வயது மூத்தவர் என்று நெட்டிஷன்கள் விமர்சித்த நிலையில் தற்போது நடிகர் கிஷோர் இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் தயாரிப்பில் 2009ல் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘பசங்க’. இத்திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனர் பாண்டியராஜ் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் அன்பு  கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் கிஷோர். அந்த வருடத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

   

‘பசங்க’ திரைப்படம் குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015ல் ‘பசங்க 2’ திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பசங்க திரைப்படத்தில் நடித்த நடிகர் கிஷோருக்கு சமீபத்தில் தமிழ்நாடு அரசின் விருதும், தேசிய விருதும் வழங்கப்பட்டது.

தற்பொழுது நடிகர் கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி காதலிப்பதாக கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி. இதைத்தொடர்ந்து லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல, கோபுரங்கள் செய்வதில்லை என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் கிஷோர். இவர் சமீபத்தில் சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தா.ர் மேலும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள ஆசை இன்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சீரியல் நடிகை ப்ரீத்தி நடிகர் கிஷோரை விட 4 வயது மூத்தவர் என்று இணையத்தில் விமர்சிக்க தொடங்கினார்கள் நெட்டிசன்கள். தற்பொழுது அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் கிஷோர் ‘என்னைவிட பிரீத்தி வயதில் மூத்தவர் தான். எங்கள் வீட்டில் இதனால் பிரச்சனை ஒன்றும் இல்லை. சிலர் தான் இதை வைத்து தவறாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் நான் இந்த கமெண்ட்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை’ என்று அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.