பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ரக்ஷிதாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?… இத்தனை கோடியா?… ஷாக்கான ரசிகர்கள்…

பிக் பாஸ் வீட்டில் இருந்து இறுதியாக வெளியேறியுள்ள சீரியல் நடிகை ரக்ஷிதாவின் மொத்த சம்பள விவரங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தற்போது ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். வாரம் ஒரு போட்டியாளர் குறைந்த வாக்குகள் பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகிறார்.

   

அந்த வகையில் இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு சீரியல் நடிகை ரக்ஷிதா வெளியேற்றப்பட்டுள்ளார். நடிகை ரக்ஷிதா தமிழ் சினிமா ரசிகர்களை சீரியல் மூலம் மிகக் கவர்ந்தவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இறுதியாக கலர்ஸ் தமிழில் ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற சீரியல் நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது விளையாட்டை மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார். தொடர்ந்து இவர் இறுதிப் போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் குறைந்த வாக்குகள் பெற்று தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை ரக்ஷிதாவின் சம்பள விவரங்கள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்பொழுது இவர் 90 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 28,000 பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. எனினும் இதை பொறுத்து பார்க்கும் பொழுது இவர் பல கோடிகளில் சம்பளம் பெற்றுள்ளார் என்பது மட்டும் உறுதியாகிறது.