
மலையாள நடிகை சஜேவன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் காக்கா என்ற குறும்படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகை லஷ்மிகா சஜேவன். அதைத் தொடர்ந்து இவர் யமண்டன் பிரேமகதா, சவுதி வெள்ளக்கா, புழையம்மா, நித்திய ஹரித நாயகன் என்ற திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பெயர் பெற்றார்.
நடிகை லஷ்மிகா சஜீவன் வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில் அவருக்கு நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இந்நிலையில் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிய வந்திருக்கிறது. இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு நடிகை உயிரிழந்த சம்பவம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.