
தற்போது சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் முதல் 10 டிஆர்பி பட்டியலில் இருக்கும் தொடர்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்திருப்பது சிங்க பெண்ணே தொடர்.
கடந்த வருடத்தில் ஆரம்பமான இந்த தொடர் சமீபத்தில் 100 எபிசோடுகளை தொட்டது. இத்தொடர், இந்த வாரத்தில் 11.10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தை கயல் சீரியல் பிடித்திருக்கிறது. இந்த தொடருக்கான இந்த வார டிஆர்பி 10.83 என்று இருக்கிறது. அதனைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வானத்தைப்போல தொடரும், நான்காவது இடத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரும் இருக்கிறது.
ஐந்தாவது இடத்தில் சுந்தரி தொடரும், ஆறாவது இடத்தில் சிறகடிக்க ஆசை தொடரும் இருக்கிறது. ஏழாம் இடத்தை இனியா சீரியல் பிடித்திருக்கிறது. அதனை தொடர்ந்து எட்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி, ஒன்பதாவது இடத்தில் ஆனந்த ராகம் உள்ளது. இறுதியாக பத்தாம் இடத்தை பிடித்திருப்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடர்.
இதற்கு முன்பு முதல் 10 டிஆர்பி பட்டியலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் இடம் பெறாது. ஆனால், சன் மற்றும் விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழும் களமிறங்கிவிட்டது.