வெளிநாட்டில் ஹாலிவுட் ஹீரோ போல தனது மனைவியுடன் ஊர் சுற்றும் விஜய் டிவியின் பிரபல சீரியல் இயக்குனர்… வெளியான அழகிய புகைப்படங்கள்…

சின்னத்திரையில் திரையில் எப்போதுமே பரபரப்பாக பேசப்பட்டு வரும் சீரியல்களின் இயக்குனராக பிரவீன் பென்னெட் வலம் வந்து கொண்டுள்ளார்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர் ஹிட்டான சீரியல்களில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி2 ஆகிய இரண்டு சீரியலையும் பிரவீன் தான் இயக்கினார்.

   

அது மட்டுமின்றி, மற்றொரு சூப்பர் ஹிட்டான ‘நம்ம வீட்டு பொண்ணு’ என்ற மூன்றாவது சீரியலின் இயக்குனரும் பிரவீன் பென்னெட் தான். விஜய் டிவியின் சூப்பர் ஹிட் கிளாசிக் சீரியல் ஆன சரவணன் மீனாட்சி சீரியலின் இயக்குனராக ரசிகர்கள் மனதில் நிரந்தரமான இடம் பெற்றார்.

அதற்கடுத்ததாக இவருடைய சூப்பர் ஹிட் சீரியல் ராஜா ராணி. மேலும், கனா காணும் காலங்கள் சீரியல் ஒளிபரப்பான காலத்திலேயே இயக்குனர் குழுவில் பணியாற்றி வந்துள்ளார் அப்போது தான் காணும் காலங்கள் சீரியலில் நடித்த சாய் பிரமோதித்தாவை காதலித்து திருமணம் செய்துள்ளார் இயக்குனர் பிரவீன். இவர்களுக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் இயக்குனர் பிரவீன் பென்னட். இவர் தற்பொழுது தனது குடும்பத்துடன் இணைந்து அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்கு எடுதத அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர இப்புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.