அமெரிக்காவின் ‘டைம்ஸ் சதுக்கத்தில்’ வெளியான மகளின் புகைப்படம்… மகிழ்ச்சியில் திளைத்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்…

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரின் மிடுக்கான தோற்றம், கம்பீரமான பார்வை என ஆக்சன் ஹீரோவாகவே திரையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார் மகேஷ் பாபு. நடிப்பால் மட்டும் இன்றி தனது அன்பான குணத்தாலும்  அதிக ரசிகர்களை கவர்ந்தார்.

   

பழம் பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகனான இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இவர் தமிழில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழில் நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புக்காக காத்திருக்கிறார் நடிகர் மகேஷ் பாபு.

தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் மகேஷ் பாபு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. நடிகர் மகேஷ்பாபு நடிகை நம்ரதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.  தற்பொழுது அவர் பெரிய சோசியல் மீடியா ஸ்டார் ஆகி விட்டார்.

அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர். இவருடைய ஒரு புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது. 12 வயது ஆன சித்தாரா தற்போது முதலே நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான நகை விளம்பரம் உலக அளவில் கவனிப்பை பெறும் வகையில், அமெரிக்காவில் உள்ள, டைம்ஸ் சதுக்கத்தில் அந்த விளம்பரப்படம் ஒளிபரப்பபட்டுள்ளது.

அமெரிக்காவில் தற்போது சுதந்திரக் கொண்டாட்டம் களைகட்டி வரும் நிலையில், டைம்ஸ் சதுக்கத்தில் வெளியாகியுள்ள இந்த விளம்பரத்தில் ‘’பிரின்சஸ் சித்தாரா” என குறிப்பிடப்பட்டுள்ளதும் பேசு பொருளாகியுள்ளது. மேலும் டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பபட்ட விளம்பரத்தில் தற்போது தான் மிகவும் இளம் வயது நடிகை நடித்த விளம்பரம் ஒளிபரப்பபடுவதும் இதுவே முதல் முறை. தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mahesh Babu (@urstrulymahesh)